களுத்துறை மாவட்டம் பதுரலிய-திக்ஹேன கனிஷ்ட வித்தியாலயத்துக்கு அருகாமையிலிருந்து, 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்கு அருகில் பொதியொன்று இருப்பதாக, பாடசாலை காவலர் நேற்று இரவு, பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில், பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிந்திய செய்திகளின்படி,பதுரலியவில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பதுரலிய ஹெடிகல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டுகள் இன்று முற்பகல் செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.