தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதன் தலைவர் சஹ்ரான் ஹாஸிமுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகவும் முஸ்லிம் பிரிவினைவாதம் தொடர்பான பிரசங்கங்களை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ்,

அபிவிருத்தி உதவியாளர் உட்பட ஆறு பேரை, ஹொரவப்பொத்தானயின் கிவுலகட மற்றும் கெப்பத்திகொல்லாவயின் எல்லேவ ஆகிய பிரதேசங்களில் வைத்து, இன்று கைதுசெய்திருப்பதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரவப்பொத்தான பிரதேச செயலகத்துடன் இணைந்ததாகப் பணியாற்றிவந்த, கிவுல்கட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் கெபித்திகொல்லாவ – எல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த ஐவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பல இடங்களில், முஸ்லிம் பிரிவினைவாதம் தொடர்பான பிரசங்கங்களை நடத்தியுள்ளார்கள் என்றும் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுடன் தொடர்புபட்டு, தற்போது வெளிநாடொன்றில் தங்கியிருக்கும் பிரதான சந்தேகநபரொருவருடன், இவர்கள் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளார்கள் என்றும், அவரிடமிருந்து, இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றுள்ளார்கள் என்றும், விசாரணைகள் மூலம் தெரியவந்ததாக, பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.