உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தெடார்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பில் உள்ள சில சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளாக இவை அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் ரூபா வைப்பிலிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.