அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், பப்புவா நியுகினியில் உள்ள மானஸ் மற்றும் நவுறு ஆகிய தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் மத்தியில் தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 2013ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய அரசாங்கம் பின்பற்றி வருகின்ற ஏதிலிக் கொள்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் ஏதிலிகள் குறித்த தீவுகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுவதால், மனதளவில் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகி, தற்கொலை செய்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.