Header image alt text

பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை கூறியுள்ளார். குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மோசடியான முறையில் சொத்து சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். Read more

சட்டவிரோதமான முறையில் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்த 41 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு தெற்கு ஆழ் கடற்பரப்பில் 715 கடல் மைல் தொலைவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 35 ஆண்களும் 06 பெண்களும் உள்ளடங்குவதாக கடற்படை கூறியுள்ளது. 18 இற்கும் 50 இற்கும் இடைப்பட்ட வயதினரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கன்னியா நிலாவெளி வீதியில் வள்ளுவர்கோட்டம் பிரதேசத்தில் புராதன மயானம் கண்டுபிடிக்கப்பட்டதாக திருகோணமலை தொல்பொருள் தினைக்கள அதிகாரி சுமனதாச தெரிவித்துள்ளார்.

கண்டுபடிக்கப்பட்ட மயானமானது சுமார் 2000 தொடக்கம் 2500 வருடகால பழமையானது என்று கணிக்க கூடியவாறு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஐந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கல்லறைகள் காட்டுப்பகுதியில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்த அவர், Read more

பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்தபோது துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மொரவக்க, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. Read more

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் 42 வயதுடைய சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி எனவும் குறித்த வைத்தியர் குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய முறையில் வருமானம் ஈட்டியமை தொடர்பிலேயே குறித்த வைத்தியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read more

கொழும்பில் வாழும் 50 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அகற்றி, அப் பகுதிகள் வர்த்தக நடவடிக்கைகக்கு வழங்கப்படவுள்ளது.

50 ஆயிரம் குடும்பங்கள் வாழும் 400ஏக்கர் காணியில் வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மாளிகாவத்தை ரயில் நிலையத்திற்கு சொந்தமான காணி, கெத்தராம அப்பிள் தோட்டம், ப்ளுமென்டல் பிரதேசத்தின் ஏரி, இரத்மலானை நீர்ப்பாசன காணி ஆகிய இடங்களில் வாழும் குடும்பங்கள் பிறிதொரு இடத்திற்கு மாற்றப்படவுள்ளனர். Read more