பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை கூறியுள்ளார். குறித்த வைத்தியரின் சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மோசடியான முறையில் சொத்து சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.இவர் சுமார் எட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்றும், அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படவுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.