பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்தபோது துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மொரவக்க, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை புத்­தளம் வான்­குளம் பகு­தியில் கைவி­டப்­பட்ட நிலையில் வாள்­களும் துப்­பாக்கி ரவை­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன. புத்­தளம் பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட வான்­குளம் பகு­தியில் நேற்று முன்­தினம் இரா­ணு­வத்­தி­னரும் கடற்­ப­டை­யி­னரும் இணைந்து மேற்­கொண்ட சோதனை நட­வ­டிக்­கை­களின் போதே இவை மீட்­கப்­பட்­டுள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இதன்­போது, 4 வாள்­களும், குழல் 12 ரக துப்­பாக்கி ரவை­களும் , மற்றும் வேறு சில பொருட்­களும் மீட்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வந்­துள்­ளது. நாட­ளா­விய ரீதியில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் விசேட சோதனை நட­வ­டிக்­கை­களை கருத்­திற்­கொண்டு யாராவது இவற்றை குளத்தில் கைவிட்டுச் சென்­றி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். புத்தளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.