Header image alt text

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நாரஹேன்பிட்டியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது, வீடொன்றிலிருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் முகமூடிகள் நான்கும்,

வீட்டில் பயன்படுத்துவதற்குத் தடை செய்யப்பட்ட கத்திகள் பத்தும் மற்றும் இலத்திரனியல் கருவிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நாட்டில் ஆறு மாவட்டங்களில் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு பொலிசாரினாலும் அடாத்தாக விகாரை அமைத்துள்ள பிக்குவினாலும் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிள்ளையார் ஆலயம் பலநூறாண்டுகளாகப் பழைய செம்மலை கிராமத்தில் காணப்படுகின்ற நிலையில் போருக்குப் பின்னர் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் குடியமர்ந்து குருகந்த ரஜமகா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றையும் அமைத்துள்ளதோடு பரியப் புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார். Read more

சிலாபம் மாதம்பே உள்ள பாடசாலையொன்றின் அலுவலகத்திலிருந்து தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் இலங்கைத் தலைவரும், இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் விரிவுரைகள் அடங்கிய மடிக்கணினியொன்றும், 135 இறுவட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த பாடசாலையின் பொறுப்பாளரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து, சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போதே, குறித்த பாடசாலையிலிருந்து இவை மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தர்கா டவுன் பிரேக்கிங் நியுஸ்’ என்ற பெயரில் 100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப் குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கம பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 20, 23 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்தக் குழுவுடன் தொடர்புடைய மேலும் 25 பேர் இன்று அக்குழுவிலிருந்து உடனடியாக விலகியிருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. Read more

கிளிநொச்சி இரணைதீவில் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகள் இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பூநகரிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் 26 வருடங்களின் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் மீள்குடியேறினர்.

கடற்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு மீள்குடியேறியுள்ள மக்கள் தமக்கு ஆரம்பத்தில் கொட்டில்களை அமைப்பதற்கு கிடுகுகள் மாத்திரமே வழங்கப்பட்டன. அவற்றை வைத்து தற்காலிக கொட்டகைகளை அமைத்ததாகவும் தற்போது இந்தக்கொட்டில்கள் சேதமடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளனர். Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடுமப்ங்களைச் சேர்ந்த 40093 பேரும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதேவேளை இந்தப்பகுதிகளில் வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. Read more

சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்துச் சேகரித்தமை தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர், செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபி என்ற வைத்தியரின், சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, குறித்த வர்த்தகர் முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு போலி மருத்துவச் சான்றிதழ்களை பெற்றுக்கொடுத்துள்ளாரென்றும், இந்த நடவடிக்கைகள் குறித்த வைத்தியரின் தனிப்பட்ட மருத்துவ சிகிச்சை நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அருகில் உள்ள லட்சத் தீவுகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15பேர் இலங்கையில் இருந்து லட்சத்தீவுகளுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், இது குறித்த எச்சரிக்கையை கேரள பொலிஸாருக்கு மத்திய உளவுத்துறை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more

கெக்கிராவ பிரதேசத்தில் நடத்தப்பட்டுவந்த முன்பள்ளி பாடசாலை கட்டடமொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஒரு தொகை வெடிபொருள்களுடன், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய, இருவர் இராணுவத்தினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் மடாடுகம பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேநகபர் ஒருவர் இக் கட்டடத்தின் பொறுப்பானவராகக் கடமையாற்றி வந்துள்ளதுடன், Read more

தீவிரவாதிகளால் பொசன் போயாத்தினத்துக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்து, இரத்தினபுரி நகரில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த நபர் ஒருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர், இரத்தினபுரி- கெட்டலியன்பல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இந்த விடயம் தொடர்பில், இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.