சிலாபம் மாதம்பே உள்ள பாடசாலையொன்றின் அலுவலகத்திலிருந்து தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் இலங்கைத் தலைவரும், இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரானின் விரிவுரைகள் அடங்கிய மடிக்கணினியொன்றும், 135 இறுவட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த பாடசாலையின் பொறுப்பாளரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து, சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போதே, குறித்த பாடசாலையிலிருந்து இவை மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.