தர்கா டவுன் பிரேக்கிங் நியுஸ்’ என்ற பெயரில் 100 உறுப்பினர்களைக் கொண்ட வட்ஸ்அப் குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கம பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 20, 23 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்தக் குழுவுடன் தொடர்புடைய மேலும் 25 பேர் இன்று அக்குழுவிலிருந்து உடனடியாக விலகியிருப்பதாகவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த 3 வருடங்களாக இந்த வட்ஸ்அப் குழு செயற்படுத்தப்பட்டு வருவதுடன், இந்தக் குழுவை உருவாக்கியவர் பல வருடங்களாக வெளிநாட்டில் கடமையாற்றி நாடு திரும்பியவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் 3 நாள்கள் தடுத்து வைத்து, விசாரணை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.