கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12766 குடுமப்ங்களைச் சேர்ந்த 40093 பேரும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக கோணாவில், அக்கராயன், காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, பூநகரி, கண்டாவளை, ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதேவேளை இந்தப்பகுதிகளில் வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவப் பிரிவினுடைய தகவல்களின் படி கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவில்; 130 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பூநகரிப்பிரதேச செயலாளர் பிரிவில் 2068 குடும்பங்களைச் சேர்ந்த 8679 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கரைதுரைப்பற்று, ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் வரட்சியினால் பாதிக்கப்படடிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின்கீழ் 1967 குடும்பங்களைச் சேர்ந்த 6296பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கரைதுறை பற்றுப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் 10790 குடும்பங்களைச் சேர்ந்த 33797 பேர் பாதிக்கப்படடிருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு நிலவும் வரட்சியின் காரணமாக முல்லைத்தீவில் 12766 குடும்பங்களைச் சேரந்த 40093 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 2738 குடும்பங்களைச் சேர்ந்த 9082 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.