ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அருகில் உள்ள லட்சத் தீவுகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 15பேர் இலங்கையில் இருந்து லட்சத்தீவுகளுக்கு தப்பி சென்றுள்ளதாகவும், இது குறித்த எச்சரிக்கையை கேரள பொலிஸாருக்கு மத்திய உளவுத்துறை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கடந்த 23 ஆம் திகதி மத்திய உளவுத்துறை, கேரள பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், கடலோர பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கேரள கடலோர அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.