Header image alt text

கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று பெண் நோயியல் வைத்தியரான மொஹமட்  சாஃபியிடம் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதாகக் கூறும் 120 தாய்மார்கள்  சாஃபிக்கு எதிராக முறைபாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இன்றைய தினம் தாய்மார்கள் 50 பேர் முறைபாடுகளை பதிவு செய்துள்ளதாக குறித்த வைத்தியாசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கெக்கிராவை, மடாடுகமவில் அமைக்கப்பட்டிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசலொன்று ஊர்மக்களால் இன்று உடைத்து அகற்றப்பட்டது. ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி மேற்படி பள்ளிவாசலை இவ்வாறு உடைத்து அகற்றியுள்ளனர்.

பிரதேசத்தின் சிறுவர்களுக்காக நூலகம் ஒன்றை அமைக்க ஒதுக்கப்பட்ட காணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் வெளிநாட்டு நிதியுதவியுடன் பள்ளிவாசல் அமைக்கப்பட்டிருந்ததாக பிரதான பள்ளிவாசலின் தலைவர் எம்.எச்.எம் அக்பர் கான் தெரிவித்திருந்தார். Read more

நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளரான மொஹமட் அலி ஹசன் துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்வானை பகுதியிலுள்ள அவரது வீட்டை, பொலிஸார் மற்றும் இராணுவத்தார் இணைந்து சோதனையிட்ட போது, அங்கிருந்து 93 துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவை போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான ரவைகள் என்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதன்படி பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரவும், விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சராக பீ.ஹரிசனும், வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக வசந்த சேனாநாயக்கவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்று இரவு, வீடொன்றுக்குள் வீடு புகுந்து, வாள் வெட்டு குழுவினர் நடத்திய தாக்குதலில் பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்ததாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த வீட்டில் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை குறித்த குழுவினர் களவாடி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கைக்கு விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையை தளர்த்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று (28) இந்த தகவலை வெளியிட்டதாக அதன் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தினார்.

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டவர்கள் உயிரிழந்திருந்தனர். Read more

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39ஆம் கொலனி வாய்க்காலில் நீர் ஓடும் துருசி பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி குருமன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய சந்திரகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந் 6 பேர் கொண்ட நண்பர்கள் சம்பவ தினமான நேற்று காலை முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள 39ம் கொலனியிலுள்ள வாய்க்காலில் நீராடச் சென்றுள்ளனர். Read more

திருகோணமலை கன்னியா பகுதியில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு கண்டனத்தையும் மனவேதனையும் இந்துக்குரமார் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இச்சம்வம் தொடர்பில் குறித்த அமைப்பின் தலைவர் கே.வி.கே.வைத்தீஸ்வரக்குருக்கள் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க’ என்னும் தத்துவத்திற்கு அமைவாக உலகவாழ் மக்கள் அனைவரும் தமது வாழ்வியலை நடத்திவருகின்றார்கள். Read more

எயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் வான்படைத் தளபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி சிறிசேனவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

கைதுசெய்யப்பட்ட குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக இதுவரை 129 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று 64 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் சேவையாற்றிய காலப்பகுதியினுள் சத்திர சிகிச்சைகளுக்கு உள்ளான 10 பெண்கள் நேற்று தம்புள்ளை மருத்துவமனை மற்றும் காவற்துறையில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். குருநாகல் போதனா மருத்துவமனையில் சேவையாற்றிய குறித்த மருத்துவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். Read more