கைதுசெய்யப்பட்ட குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக இதுவரை 129 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று 64 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் சேவையாற்றிய காலப்பகுதியினுள் சத்திர சிகிச்சைகளுக்கு உள்ளான 10 பெண்கள் நேற்று தம்புள்ளை மருத்துவமனை மற்றும் காவற்துறையில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். குருநாகல் போதனா மருத்துவமனையில் சேவையாற்றிய குறித்த மருத்துவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்தும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.