உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து நாடாளுமன்றிற்கு அறிவிப்பதற்காக நியமிக்கப்பட்ட விஷேட தெரிவு குழுவிற்கு, இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரால் சாந்த கோட்டேகொட அழைக்கப்பட்டுள்ளார்.

இன்றுகாலை 9மணியளவில் அவர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றார். முதலாவது சாட்சியாளராக அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை சாட்சி வழங்கல் இடம்பெறவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை, உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாத தாக்குதல் மற்றும் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை அறிக்கையிடுவதற்காக ஊடகங்களுக்கு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கூறியுள்ளார்.