கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் மாவட்ட போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று பெண் நோயியல் வைத்தியரான மொஹமட்  சாஃபியிடம் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதாகக் கூறும் 120 தாய்மார்கள்  சாஃபிக்கு எதிராக முறைபாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இன்றைய தினம் தாய்மார்கள் 50 பேர் முறைபாடுகளை பதிவு செய்துள்ளதாக குறித்த வைத்தியாசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய பிந்திய செய்திகளின்படி,

சட்டவிரோதமாக குடும்பக்கட்டுப்பாட்டை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிராக இதுவரையில் 238 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குருணாகலை வைத்தியசாலையில் இன்று மட்டும் 82 முறைபாடுகள் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு மொத்தமாக 202 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. தம்புள்ளை வைத்தியசாலையில் 34 முறைப்பாடுகளும், கலேவலையில் 2 முறைப்பாடுகளும் பதிவாகின.