மன்னார் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றி வரும் ரி.சரவணராஜா உடன் அமுலுக்கு வரும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மன்னார் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மாணிக்கவாசகம் கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இன்று தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஹேரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர் ஒருவர் மன்னார் நீதிமன்றத்தின் சிறைக்கூடத்தில் மயங்கி வீழ்ந்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

902 மில்லி கிராம் நிறை கொண்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து அவர் நீதிமன்ற சிறைக்கூடத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவர் நீதவானின் உத்தரவுக்கு அமைய மன்னார் பொது வைத்திசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.