Header image alt text

தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு இன்று (30.06.2019) யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் இராசமாணிக்கம் அரங்கில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்று, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. அடுத்து, தமிழரசுக் கட்சி மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழரசுக் கட்சித் தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. Read more

யாழ். மானிப்பாய் டச் ரோட் ஐந்தாம் வீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமாலை 6.00மணியளவில் இவ்வீதியினை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், Read more

யாழ். மானிப்பாய் டச் ரோட் ஆறாம் வீதிக்கான புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 5லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நேற்றுமாலை 5.30மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், Read more

யாழ். நவாலி வடக்கு குதனை ஒழுங்கைக்கான இரண்டாம் கட்ட புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 15லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

நேற்றுமாலை 5.00மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், முன்னாள் ஆசிரியர் செல்வராஜா மற்றும், பயனாளிகள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ். நவாலி அட்டகிரி கந்தசாமி ஆலய சுற்றுவீதி நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 20லட்சம் ரூபாயில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமாலை 4.30மணியளவில் இவ்வீதி புனரமைப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இந்நிகழ்வில் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலி தென்மேற்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கணேசவேல், முன்னாள் ஆசிரியர் செல்வராஜா மற்றும் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

யாழ். மானிப்பாய் ஐந்தாம் கட்டை ஒழுங்கைக்கான புனரமைப்புப் பணிகள் நேற்றையதினம் (29.06.2019) ஆரம்பித்து வைக்கப்பட்டன. மேற்படி பள்ளமான வீதிக்கு தார் மற்றும் சீமெந்து போடப்படுகின்றது.

நீண்டகாலமாக இப்பாதை வெள்ளவாய்க்காலாய் இருந்தமையால் மழை காலங்களில் இப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியான 15லட்சம் ரூபாய் மூலம் மேற்படி வீதிக்கான புனரமைப்புப் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more

விழிநீர் அஞ்சலி – அமரர் ராமலிங்கஐயர் செல்லையா வல்லிபுரம் அவர்கள்-

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளத்தை பிறப்பிடமாகவும், வவுனியா கோயில்புதுக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட ராமலிங்கஐயர் செல்லையா வல்லிபுரம் அவர்கள் நேற்று (28.06.2019) இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் அமரர் தோழர் வல்லிபுரம் உதயகுமாரசிங்கம் (கிளியன்) அவர்களின் அன்புத் தந்தையாவார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) 

(அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை காலை 10.மணியளவில் கோயில்புதுக்குளத்தில் இடம்பெறவுள்ளது.)

தென்மராட்சி சம்பாவெளி கெற்பேலி ஸ்ரீ செம்பவலஞ்சுளிப்பிள்ளையார் தேவஸ்தான அறநெறி பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் (28.06.2019) இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினரான புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தென்மராட்சி பிரதேச சபையின் உப தவிசாளர் செ.மயூரன், கௌரவ விருந்தினர்களாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சமூக சேவையாளர் கிருஸ்ணபிள்ளை, முன்னாள் நகரசபை உறுப்பினர் கிசோர் ஆலய நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலயின் ஆசிரியர், நிர்வாகத்தினர், அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
Read more

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பிரதி அமைச்சர் உரையாற்றினார். இந்த பணிக்காக பலாலி விமான நிலையம் நவீனமயப்படுத்தப்படும். இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். Read more

யாழ். அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்தின் 51ஆவது ஆண்டு விழாவும், தந்தை செல்வா சனசமூக நிலைய வீதி திறப்பும், மின் கட்டமைப்பு வழங்கலும் இன்றுமாலை நடைபெற்றது.

இதன்கீழ் அச்சுவேலி மேற்கு செல்வநாயகபுரம் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதிமூலம் மேற்படி பூரணப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 5.5மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் இந்த கிராமத்தில் மாத்திரம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. மைதானம் புனரமைக்கப்பட்டு, மின்சார வசதி வழங்கப்பட்டதோடு, சனசமூக நிலைய வீதியும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. Read more