யாழ்ப்பாணம் பலாலி படைத்தளம் பகுதிக்கு அண்மையாக கண்ணிவெடி வெடித்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு சிப்பாய்கள் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்றுமாலை இடம்பெற்றது. பலாலியில் படைத்தளம் அமைந்துள்ள பகுதியை அண்மித்த காணிகள் இராணுவத்தினரால் சிரமதானம் செய்யப்படுகின்றது. அதேபோல் இன்றும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கல் ஒன்றை இராணுவத்தினர் அகற்ற முற்றபட்டபோது,அப் பகுதியில் கண்ணிவெடி வெடித்துள்ளது. அதன்போது சிப்பாய் ஒருவர் இடுப்புக்கு கீழ் பகுதி முற்றாக சிதவடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. பலாலி பொலிஸார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.