அமெரிக்காவின் அரசியல் – இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ஆர்.க்ளார்க் கூப்பர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களயத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் எதிர்வரும் 7ம் திகதிவரை சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், அவரின் இலங்கைக்கான விஜயத்தின் போது, பாதுகாப்பு, அமைதியை பேணுதல், கண்ணிவெடிகளை அகற்றுதல், பயங்கரவாத எதிர்ப்பு, இருதரப்புக்கும் முக்கியமான வேறு பிரிவுகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.