நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டமானது இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.

அமைச்சர் ரிஷாட் பதியூதின், ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கக் கோருமாறு வலியுறுத்தி கடந்த 31ஆம் திகதி தொடக்கம்  கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு முன்பாக தேரர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 3ஆவது நாளாகவும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் தேரரின் உடல் நிலை மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.