இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அவுஸ்திரேலியா உள்நாட்டலுவல்கள் அமைச்சர், பீட்டர் டடின் நாளை இலங்கை வரவுள்ளாரென, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டிய- செபஸ்தியர் தேவாலயத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஆம் திகதி இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஊடகவிலாளர் சந்திப்பொன்றையும் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.