தேசிய தௌஹீத் ஜமாத்தின் பள்ளிவாசல்களை நிர்மாணித்தார் எனத் தெரிவித்து நசூர்தீன் என்ற பொறியிலாளரை தெஹிவளை கவ்டானயில் வைத்து கைதுசெய்துள்ளதாக ஹொரோவொபொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரோவொபொத்தானை, கெப்பித்திகொல்லாவ, எல்லேவ, பத்தேவ பகுதிகளில் பள்ளிவாசல்களை நிர்மாணித்தார் என்று கூறி சிலர் வழங்கிய தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவூதியில் நீண்ட காலம் பொறியியலாளராக பணியாற்றிய இவர் பள்ளிவாசல்களை நிர்மாணிக்க பணம் பெற்றது எப்படி என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றன. சஹ்ரானின் சகா அபூபக்கர் என்பவருடன் இவர் தொடர்பில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.