தெஹிவளை பகுதியில் வைத்து தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிநுட்ப பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 53 வயதுடைய மொஹமட் சஹீன் நசூர்தீன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.