பத்திரிகை அறிக்கை-

                        
முஸலிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டியேற்பட்ட சூழல் குறித்து கடுமையான அதிருப்தி- த.சித்தார்த்தன்,பா.உ.

நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையாக செயற்பட்டு, இனத்தின் நன்மைக்காக எந்த தியாகத்தையூம் செய்வோம் என்பதை நிரூபித்துள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளை பாராட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகட்சியான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்,பா.உ. தெரிவித்துள்ளார்.முஸ்லிம் மக்களின் ஜனநாயகரீதியான குரலை இனவாத சக்திகள் முடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமையென சுட்டிக்காட்டிய த.சித்தார்த்தன் அவர்கள், முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டியேற்பட்ட சு+ழல் குறித்து கடுமையான அதிருப்தியினை தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு 6வது திருத்த சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் இருந்து விலகுவதற்கான நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அந்த நிர்ப்பந்தத்தால் தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அற்றுப்போகும் நிலையூம், தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை ஜனநாயகரீதியில் வெளிப்படுத்த முடியாத நிலையூம் ஏற்பட்டது. இதனையடுத்து, தமது ஜனநாயக குரல்கள் வலுவிழக்கச் செய்யப்பட்ட நிலையில், ஆயூதப் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு பெருகியது.

இன்று நாடாளுமன்றத்தை விட்டு முஸ்லிம் பிரதிநிதிகள் விலக்கப்படாவிட்டாலும், தாம் பழிவாங்கப்படுகிறோம் , தமது குரல்கள் முடக்கப்படுகின்றன என்ற எண்ணம் முஸ்லிம் மக்களின் மனங்களில் விதைக்கப்படுவது போன்ற சம்பவங்களே நடந்தேறிக் -கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் மக்களின் ஜனநாயக குரல்கள் அடக்கப்படுவதனூடாக அவர்களை தீவிர நிலைப்பாட்டை நோக்கி தள்ளும் இனவாத செயற்பாட்டை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. பிரச்சனைகளை நியாயமாக, சட்ட, அரசியல் ரீதியாக கையாண்டு தீர்க்க வேண்டும்.

இந்த நெருக்கடிமிக்க சூழ்நிலையில், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு நிற்போம், எப்படியான தியாகத்தையூம் செய்வோம் என்பதை நிரூபித்து காட்டியூள்ளார்கள். அவர்களின் ஒற்றுமையையூம், செயற்பாட்டையூம் மனதார பாராட்டுகிறோம்.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவிவிலகல் தேவையற்றது, இனவாதம் வெற்றியடைந்ததது என ஒரு பகுதியினர் குறிப்பிட்டு வந்தாலும், உண்மையில் இந்த விவகாரத்தில் மிதவாத போக்குடைய முஸ்லிம் தலைவர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பதே என்னுடைய கருத்தாகும் என த.சித்தார்த்தன், பா.உ அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.