உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக, அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பீட்டர் டடின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, பீட்டர் டடின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் ஆட்கடத்தல் வர்த்தகத்தைத் தடுப்பது தொடர்பில், பிரதமரும் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும் தத்தமது அபிப்ராயங்கள், கருத்துகளை இதன்போது பரிமாறிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.