குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை, குருணாகல் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளுக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மட்டும் 629 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.ஏனைய 108 முறைப்பாடுகள் தம்புள்ளை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர் மொஹமட் ஷாபி தங்களுக்கு கருத்தடை செய்திருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே அவரிடம் சிகிச்சை பெற்ற பின்னர் குழந்தைகள் பிறக்கவில்லை என்றும் முறைப்பாடுகளில் பெண்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.