அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் பலியான நான்கு பேரின் சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த குறித்த சடலங்களின் உடற் கூறுகள் பழுதடைந்துள்ளமையால் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து, பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின்போது இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.குறித்த சம்பவத்தில் 6 சிறுவர்களினதும், 6 ஆண்களினதும், 3 பெண்களினதும் சடலங்கள் மறுநாள் மீட்கப்பட்டன. குறித்த குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், கடந்த மாதம் 2ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யய்பட்டன.

எவ்வாறாயினும் இரசாயண பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த குறித்த சடலங்களின் உடற் கூறுகள் பழுதடைந்துள்ளமையால் அம்பாறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.