பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக

யாழ். உடுவில் பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 70 குடும்பங்களின் பயனாளிகளுக்கு மின்சார வசதி மற்றும் வீடுகளுக்கான மின் இணைப்பு செய்வதற்கான காசோலைகள் 06.06.2019 வியாழக்கிழமை அன்று கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் அவர்களுடன், பிரதேச செயலாளர் ஜெயகாந்த், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேசசபை தவிசாளர் தர்சன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ர.யுகராஜ், பிரதேச செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.