யாழ். நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தில் கடந்த 06.06.2019 வியாழக்கிழமை அன்று நவீன கற்றலுக்கான திறனாய்வு வகுப்பறை (Smart Class Room) புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

வித்தியாலயத்தின் அதிபர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ரவிச்சந்திரன், நல்லூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் அன்ரன், வகுப்பறைக்கான நிதியுதவியை வழங்கிய அன்பர்களின் உறவினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர். சமூக சேவையாளர் வைத்தியக்கலாநிதி நித்தியானந்தம் அவர்களால் இயக்கப்படுகின்ற தொண்டு நிறுவனம் ஊடாக லண்டனில் இருக்கும் வித்தியாலய பழைய மாணவர்களின் நிதியுதவியில் மேற்படி திறனாய்வு வகுப்பறை அமைக்கப்பட்டது.