யாழ். ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா 06.06.2019 வியாழக்கிழமை கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு, ஸ்கந்தவரோதயன்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக ஆலய வழிபாடு இடம்பெற்று விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதோடு, மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. அத்துடன் மாணவிகளால் 125 விளக்குகளும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அதிபர் செல்வஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்வின் இறுதியில் 125 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்திலும் சுற்றுப் புறங்களிலும் நடப்பட்டது. அத்துடன் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை அமைப்பதற்கான அத்திவாரக்கல் நாட்டப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.