அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக அமெரிக்க மக்களின் நட்புறவை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அவர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது