நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் நாரஹேன்பிட்டி தலைமையக செயலாளர் ரஞ்சித் விஜேசிறி தெரிவித்தார்.இதேவேளை, தேசிய ஊழியர் சங்கத்தின் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து சபையின் ஊழியர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.