பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று, மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோஹ்லி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மாலைத்தீவு ஜனாதிபதியுடன் அந்நாட்டின் அமைச்சரவை குழுவினர் இலங்கைக்கு முதற்தடவையாக விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள வெளிநாட்டு  தூதுவர்கள் அனைவரையும் அழைத்து, அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள நிலையில், மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு வரவுள்ளார்.