உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் முகப்புத்தகம் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ISIS அமைப்புடன் தொடர்புடையவர் என தகவல்கள் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 32 வயதுடைய மொஹமட் அசாருதீன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன தொடர்புடைய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.