ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, தஜிகிஸ்தானுக்கு இன்று (13) காலை 10:45க்கு பயணமானார்.

எமிரேட்ஸ் விமான ​சேவைக்குச் சொந்தமான ஈ.கே.651 என்ற விமானத்திலேயே, அவர் டுபாய் நோக்கி பயணமானார். அங்கிருந்து கிரிகிஸ்தான் சென்று, அதன்பின்ர் தஜிகிஸ்தானுக்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதி தன்னுடைய 50க்கும் மேற்பட்டவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.

சீனாவில் ஷாங்காய் கார்ப்பரேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வலய பிரச்சினைகள் தொடர்பில், தஜிகிஸ்தான் தலைநகர் டுஸான்​பேயில், 14,15ஆம் திகதிகளில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, அவர் பயணமாகியுள்ளார்.