மாவனெல்லை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 14 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி மாவனெல்லை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று (13) குறித்த நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்படி செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.