சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன், 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கியமை

மற்றும் ‘மூதூர் அக்ஷன் பாம்’ என்ற அரச சார்பற்ற அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டமை விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, சட்ட மா அதிபரால், உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், ஒருவித மந்தகதி நிலவுவதாகவும் இவ்விடயங்கள் மிகப்பெரிய பிரச்சினைக்குரிய விடயங்கள் என்பதால், இவை பற்றிய விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறும், பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு, சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.