அம்பாறை காரைதீவு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் காரைதீவு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.குடும்ப தகராறு காரணமாக குறித்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிர் இழந்த நபர் வடிவேல் வீதி காரைதீவு 12ல் வசிக்கும் ஒரு பெண்பிள்ளையின் தந்தையான ஞானசேகரம் ரதாஸ் (27வயது) என்பவராவார். உயிர் இழந்த நபரின் சடலம் காரைதீவு வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.