பலாங்கொடை – பெலிஹ_ல்ஓயா பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற பேஸ்புக் பயனாளிகள் சிலரின் சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளின் போது, 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 160 மி.கி ஹெரோய்ன், 300 மி.கி கொக்கெய்ன், 50 மி.கி ஐஸ் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர்களை, இரத்தினபுரி கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.