குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் டொக்டர் மொஹமட் சாஃபிக்கு எதிராக, இதுவரையில் ஆயிரத்து 3 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குருநாகல், தம்புளை வைத்தியசாலைகளிலேயே, இத்தனை முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மொக்டர் சாஃபி, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு, கர்ப்பத் தடுப்புக்கான சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் பணத்தைச் சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால், ஏப்ரல் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.