மின்னல் தாக்கியதில் விவசாயியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன் (வயது 40) என்பவரே மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டிய பங்குடாவெளி – பெரியவெட்டை எனும் வயல் பிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த குறித்த விவசாயி, மின்னல் தாக்கத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரழந்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடிப் பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.