கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர் மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில், 639 கடிதங்களுடன் மே 2ஆம் திகதி கொழும்பு மத்திய தபால் திணைக்களத்தில் வைத்து சந்தேகநபர்கள் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணை 6 இல் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிபதி ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இது தொடர்பான வழக்கை செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டுள்ளார்.