வவுனியா மாவட்டத்தில் நிலவிவரும் கடும் வரட்சியின் காரணமாக நீர்நிலைகளில் மீனினங்கள் இறந்து கரையொதுங்குகின்றமையை காணமுடிகின்றது.

இந்நிலையில், வவுனியா மூனாமடு குளத்தில் ஏராளமானளவில் மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்ட பொதுசுகாதார அலுவலகத்துக்கு தகவல் வழங்கப்பட்ட போது, அதிகாரிகள் நேற்று அங்கு வந்து சோதனையிட்டபோது, நிலவிவரும் வரட்சியின் காரணமாக குளத்தின் நீர்மட்டம் கீழிறங்கியுள்ளமையாலேயே மீன்கள் இறக்க நேரிட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.