கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக நேற்று ஆரம்பிக்கப்பட்ட உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் தலைமையில் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ கே.கே. சச்சிதானந்தசிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்னம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் இந்த உணவுதவிர்ப்பு போராட்டத்தை நடத்துகின்றனர். அவர்களுடன் சமூக அமைப்புக்கள், கல்முனை வாழ் தமிழ் இளைஞர்களும் போராட்டத்தை ஆதரித்து வருகின்றனர். இன்றைய 2வது நாள் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் உடல் நிலையைத் தேற்றும் வகையில் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.