ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு ஜனாதிபதி டொனால்ட் ஜே. ட்ரம்புடன் பயணித்தல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். போம்பேயோயின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பில் உள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இம்முறை கொழும்புக்கு விஜயம் செய்ய முடியாமல் போவதையிட்டு செயலாளர் பொம்பேயோ தமது வருத்தத்தை வெளியிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுதந்திரமானதும் பகிரங்கமானதுமான இந்து – பசுபிக் பிராந்தியம் ஆகியவற்றுக்கான உறுதிபாட்டில் வேஷரூன்றியுள்ள இலங்கையுடனான எமது உறுதியான பங்காண்மையை கோடிட்டு காட்டுவதன் நிமித்தம் பின்னொரு தினத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள அவர் எதிர்பார்த்துள்ளதாகவும் ஊடக அறிக்கை மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.