இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது.

சம்பளப் பிரச்சினை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்ய புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்திருந்தது. புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோருக்கு இடையான சந்திப்பு இன்று காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றிருந்தது. இதன்போது நாளை பிற்பகல் 02.00 மணிக்கு நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாக புகையிரத தொழிற்சங்க சம்மேளனத்துக்கு வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.