உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சிரியா மற்றும் ஈராக்கில் செயற்பட்டு வருகின்ற ஐஎஸ் தீவிரவாதிளே திட்டமிட்டிருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரி கொக்கொஃப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் 10வது சர்வதேச மாநாடு அண்மையில் இடம் பெற்றிருந்தது. இதில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த தாக்குதலானது பூகோள தீவிரவாதிகளுடைய திட்டமாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்குச் சென்று இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தியுள்ளனர். அதேபோன்று எதிர்காலத்தில் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.