கிளிநொச்சி கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சிரேஸ்ட உறுப்பினரும், கட்சியின் மாவட்ட இணைப்பாளருமாகிய திரு. வே.சிவபாலசுப்பிரமணியம் அவர்கள் வைபவத்தில் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

மேற்படி நிகழ்வில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்தினர், ஊர்ப் பெரியார்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.