அநுராதபுரம் – திருகோணமலை வீதியில் மொரவவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அமைச்சர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 08.00 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.  ஹொரவப்பொத்தான பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.